Facebook நிறுவனம் தன்னுடைய “Facebook Messenger “ விண்டோஸ் கணினிகளில் செயல்படாது என அறிவித்துள்ளது.
பிரபல சமுக வலைத்தளமான “Facebook” நிறுவனம் விண்டோஸ் கணினிகளுக்கான Facebook messenger நிரலை கடந்த மார்ச் 2012-ல் வெளியிட்டது. இதன் முலம் பயனர்கள் Facebook தளத்திற்கு செல்லாமல் நேரடியாக நண்பர்களுடன் செய்தி அனுப்பலாம்.
தற்போது இந்த மென்பொருள் வரும் மார்ச் 3 ஆம் தேதியில் இருந்து இயங்காது என Facebook நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால் மைக்ரோசாப்ட் நிறுவனம் சில தினங்களுக்கு முன்னால் விண்டோஸ் போன்களுக்கு Facebook Messenger மென்பொருள் விரைவில் வரும் என தெரிவித்து இருந்தது. Facebook தனது ஈமெயில் சேவையான “@Facebook.com” ஐ போதிய பயனர்களை ஈர்க்க முடியாமல் கைவிட்டது. சென்ற வாரம் Facebook பிரபல வாட்ஸ்அப் நிறுவனத்தை 19 பில்லியன் கொடுத்து வாங்கியது குறிப்பிடத்தக்கது.