நச்சுன்னு-5 விண்டோஸ் ஏன் இவ்வளவு பிரபலம்?

                                             1157.3_1F8AA97B

 

  1. உங்கள் கணிணியை ஆண்டி-வைரஸ் இல்லாமல் இயக்கியதுண்டா?
  2. உங்கள் யு.எஸ்.பி-ஐ இணைக்கும் போது வைரஸ் பயமில்லாமல் இருந்ததுண்டா?
  3. இணையத்தில் உலவும்போது பயமின்றி இருந்ததுண்டா?
  4. ஒரு மாதம் கணிணியை அணைக்காமல் தொடர்ந்து இயக்கியதுண்டா
  5. உங்கள் நிரல்கள்(Softwares) உறைந்து போகாமல் இருந்ததுண்டா?

             இந்த கேள்விகளுக்கெல்லாம் “ஆம்” என்று சொல்லமுடியவில்லையெனில் நீங்கள் விண்டோஸ் கணிணியை பயன்படுதுகிறிர்கள் என்று அனைவரும் அறிவர்.உங்கள்  செல்போன் ஏதாவது பிரச்னை தந்தால் அதை துக்கி ஏறிந்துவிட்டு ஆண்டிராய்டு அல்லது ஐபோன் வாங்கும் நீங்கள், இவ்வளவு பிரச்சனைகள் இருந்தும் இன்னும் ஏன் விண்டோஸ் கணிணியை உபயோகிக்கிறிர்கள் என்று  என்றாவது யோசித்ததுண்டா? இன்னும் நீங்கள்  விண்டோஸ்-ஐ பயன்படுத்துவதற்கு நச்சுன்னு ஐந்து காரணங்கள்….

1.வியாபார யுக்தி:

               நீங்கள் கணிணியை வாங்கும் போதே பெரும்பாலும் அதில் விண்டோஸ் பதியப்பட்டு தான் வருகிறது. நீங்கள் அதற்கும் சேர்த்தே பணம் செலுத்துகிறீர்கள். ஆரம்ப காலத்தில் இந்த யுக்தி  விண்டோஸ்-ஐ வளர்க்க பெரும் உதவியாக இருந்தது. இதனால் மக்கள் வேறு இயங்குதளத்தை தேட வேண்டிய அவசியமும் வாய்ப்பும் இல்லாமல் போனது.  மேலும் மைக்ரோசாப்ட்  செய்யும் சில சூழ்ச்சிகளும், விளம்பர யுக்திகளும் விண்டோஸ் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றன.

2.மென்பொருட்கள்:

                                                   

      தனிநபர் கணிணிகளின்(Personal Computers) ஆரம்ப காலத்திலேயே விண்டோஸ் தனக்குரிய தனி இடத்தைப் பெற்றுவிட்டது. இதனால் பல மென்பொருள் நிறுவனங்கள் மற்றும் குறியிடாளர்கள்(Programmers)  தங்கள் மென்பொருட்களை விண்டோஸ்க்கு இயற்றயுள்ளனர். வேறு எந்த இயங்குதளமும்(Operating system) தொட முடியாத அளவிற்கு  விண்டோஸ்க்கு மென்பொருட்கள் குவிந்து கிடக்கின்றன.   சில பிரபல மென்பொருட்கள்( மைக்ரோசாப்ட் ஆபீஸ், விசுவல் ஸ்டுடியோ)  விண்டோஸ்க்கு மட்டுமே கிடைகிறது. அந்த மென்பொருட்களை நீங்கள் பயன்படுத்தவேண்டுமானால் நீங்கள் விண்டோஸ்ஐ உபயோகிக்க வேண்டும். இதற்கென்றே சிலர் வேண்டாவெறுப்பாக விண்டோஸ் பயன்படுத்துகின்றனர்.

3.விளையாட்டுகள்:

                              

            XBOX, PLAYSTATION, NINTENDO போன்ற விளையாட்டு சாதனங்களில் இயங்கும் விளையாட்டுக்கள் விண்டோஸ்க்கும் கிடைக்கிறது.இதற்கென்றே பல விளையாட்டு ஆர்வலர்கள் விண்டோஸ் ஐ பயன்படுத்துகின்றனர்.

4.பழக்கம்:

                   images நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் இது உண்மையே!!!  நாம் சிறுவயது முதல் பார்த்து பழகிய கணிணிகள் யாவும் விண்டோஸ் கணிணிகளே. நமது கணிணி குறித்த பெரும்பான்மை அறிவு விண்டோஸ் சார்ந்தவையே!  நாம் விண்டோஸ் க்கு பழகிவிட்டதால் அதில் மட்டுமே நாம் சிறப்பாக செயல்படமுடியும் என்ற எண்ணம் நமக்கு ஏற்பட்டுவிட்டது. மைக்ரோசாப்ட் தொடங்கிய காலத்தில் பில் கேட்ஸ்-ன் யோசனையும் இதுதான். மேலும் புதிய இயங்குதளத்திற்கு மாறினாலும் அதில் திறம்படச் செயலாற்ற காலம் எடுக்கும். இதனால் பல நிறுவனங்கள் இயங்குதள மாற்றத்தைத் தவிர்பர்.

5.அறியாமை:

               பலருக்கு விண்டோஸ் தான் கணிணி. அவர்களால் கணிணி தனியாக விண்டோஸ் தனியாக பார்க்கத் தெரியாது. இணையம் உலவுவது, அலுவலக கோப்புக்களைப் பார்ப்பது, இசை கேட்பது போன்ற சிறிய விஷயங்களை இவர்கள் செய்கின்றனர். லினக்ஸ் போன்ற பாதுகாப்பான இயங்குதளங்கள்(Operating systems) முற்றிலும் இலவசமாகவே கிடைத்தாலும், அதிக விலைகொடுத்து விண்டோஸ் மற்றும் ஆபீஸ் தொகுப்புகளை வாங்குகின்றனர்.ஆண்டி-வைரஸ் நிரலையும் இவர்கள் பெரிதும் பணம் செலுத்தியே உபயோகிப்பது அறியாமையே!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s