இயங்குதளங்கள்(Operating Systems) கணினியின் முக்கிய பொருளாகும். நீங்கள் அதிநவீன செயலி(Processor) மற்றும் வன்பொருள்கள்(Hardwares) வைத்திருந்தாலும், இயங்குதளத்தின் வேகத்தை பொறுத்தே ஒரு கணிணியின் வேகம் அமையும். அதனைத் திறம்பட உபயோகிக்கும் பொறுப்பு இயங்குதளத்தையே சாரும். நவீனமான,வேகமான, உபயோகிக்க எளிதான, திறம்படச் செயலாற்ற கூடிய ஒரு இயங்குதளத்தையே அனைவரும் விரும்புவர். தற்போது(April 2014)அதிகம் பயன்படுத்தப்படும் தனிநபர் இயங்குதளங்கள் நச்சுன்னு ஐந்தில்…
உபுண்டு லினக்ஸ்(Ubuntu Linux):
உபுண்டு ஒரு லினக்ஸ் வகை இயங்குதளமாகும். இது டெபியன் லினக்ஸ்-ஐ அடிப்படியாக கொண்டது. கனொநிகல்(Cannonical) நிறுவனத்தால் இது வடிவமைக்கபட்டு முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. இது மிகவும் திடமான, பயன்படுத்த எளிதான, பாதுகாப்பான இயங்குதளமாகும். உங்கள் கணினியில் உபுண்டுவை நிறுவுவது(Installation) மிகவும் சுலபம். யார் வேண்டுமானாலும் உபுண்டு தளத்திற்கு சென்று இலவசமாக பதிவிறக்கம் (Download) செய்துகொள்ளலாம்.
இது விண்டோஸ்ஐ விட அளவில் மிகச்சிறியதாகவும், வைரஸ்சால் பாதிக்கப்படாமலும் உள்ளது. உபுண்டு இயங்க குறைந்த வன்பொருள்(Minimum Hardware) இருந்தாலே போதும். விண்டோஸ் இயங்க தடுமாறும் கணிணிகளில் கூட இது சிறப்பாக இயங்குகிறது. லினக்ஸ் அனைத்தும் உலகத்தில் 1.69% மக்களால் பயன்படுத்தப்படுகிறது. கனொநிகல் நிறுவனத்தின் பெருமுயற்சியலும், எளிதாக,திடமாக உள்ளதாலும், வைரஸ் தொல்லைகள் இல்லாததாலும் இதன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மேக் ஒஸ்(Mac OS X):
ஆப்பிள் நிறுவனத்தின் மக்கின்டோஷ்(Macintosh) கணிணிகளிள் மட்டும் இயங்குமாறு வடிவமைக்கபட்ட இயங்குதளம் “மேக் ஒஸ்” ஆகும். இது யுனிக்ஸ்ஐ (Unix) அடிப்படையாக கொண்டு இயங்குகிறது. இதுவும் கட்டுமஸ்தான, அருமையான இயங்குதளமாகும். இதை நீங்கள் உபயோகிக்க வேண்டுமானால் நீங்கள் ஆப்பிள் மக்கின்டோஷ் கணிணியை வாங்க வேண்டும். இது உலக அளவில் 7.58% மக்களால் பயன்படுத்தபடுக்கிறது.
விண்டோஸ்:
“ பேர கேட்டாலே சும்மா அதிருதில்ல…” தனிநபர் கணிணிகளின் அசைக்க முடியாத ஜாம்பவான். விண்டோஸ்க்கு நான் முன்னுரை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. நாம் உபயோகித்த முதல் கணிணி விண்டோஸ் கணிணியாகத் தான் இருக்கும். 1990-ல் விண்டோஸ் 3.0 வெளியானதில் இருந்து தற்போது உள்ள விண்டோஸ் 8.1 வரை இதை அடித்துக்கொள்ள ஆளில்லை. இதன் போட்டியாளர்கள் நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு 90% க்கும் அதிகமான பயனர்களை கொண்டுள்ளது.
விண்டோஸ் 8 11.30% துடன் மூன்றாவது இடத்திலும், விண்டோஸ் XP 27.69% துடன் இரண்டாவது இடத்திலும், மாபெரும் 48.77% விண்டோஸ் 7 முதல் இடத்திலும் உள்ளது. மைக்ரோசாப்ட் விண்டோஸ் XP சப்போர்ட்ஐ நிறுத்திவிட்டதால் XP பயனர்கள் குறைந்து கொண்டே வருகின்றனர்.