Pendrive-ல் லினக்ஸ் நிறுவுவது எப்படி???

நீங்கள் உங்கள் கணினியில் வேறு ஒரு இயங்குதளம் பதிந்து இயக்க விரும்புகிறீகளா? ஆனால் உங்கள் கணினியில் உள்ள தரவுகளுக்கு பாதிப்பு ஏற்படும் என பயபடுகிறீர்களா? உங்கள் கணினிக்க்கு எந்த இடயூறும் இல்லாமல் இதை செய்ய முடியும். மேலும் உங்கள் விண்டோஸ் இயங்குதளத்திற்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் இதை செய்ய முடியும்pendrive!

இதோ அதற்கான வழிமுறைகள்:

  1. முதலில்  நீங்கள் என்ன இயங்குதளத்தை பயன்படுத்த போகிறீர்கள் என தேர்வு செய்யுங்கள். லினக்ஸ்USB 1 -ல் பல வகையான இயங்குதளங்கள் உள்ளன. அவை யாவும் ஒன்றுகொன்று வேறுபட்டவையாகும். பொதுவாக உபுண்டு லினக்ஸ்(Ubuntu), பெடோரா லினக்ஸ்(Fedora Linux), லினக்ஸ் மின்ட்(Linux Mint)  போன்றவை மிக எளிமையான இயங்குதளங்கள் ஆகும். அவற்றின் Image file(.iso) ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
  2. பிறகு “universel USB Installer” என்னும் மென்பொருளை உங்கள் கணினியில் பதிவிறக்கம் செய்யுங்கள். இதை “www.PendriveLinux.com” என்னும் தளத்திலிருந்து பெற்று கொள்ளலாம்.
  3. “Universal USB installer” மென்பொருளை இருதடவை சொடுக்கவும்.
  4. “I Agree”-ஐ சொடுக்கவும்
  5. இப்போது எந்த இயங்குதளத்தை பயன்படுத்த போகிறீர்களோ அதை தேர்வு செய்யுங்கள். (உ.த நீங்கள் உபுண்டு பயன்படுத்த வேண்டும் என்றால் உபுண்டுவை தேர்வு செய்யுங்கள். )
  6. பின் “Browse” ஐ சொடுக்கி, நீங்கள் பதிவிறக்கம் செய்த இயங்குதள பைலை தேர்தெடுக்கவும். (தரவிறக்கம் செய்யவில்லை என்றால் Download USB-2Link” என்னும் கட்டத்தில் டிக் செய்துவிட்டு, பதிவிறக்கம் ஆகும் வரை காத்திருந்து பிறகு அந்த பைலை தேர்வு செய்யவும்).
  7. அடுத்து வரும் மெனுவில் உங்களுடைய Pendriveஐ தேர்ந்து எடுக்கவும்(குறைந்தது 2 GB Pendrive பயன்படுத்துவது நல்லது).
  8. அடுத்து வரும் Slider-ல் உங்களுக்கு எவ்வளவு இடம் காலியாக இருக்க வேண்டும் என்பதை செட் செய்யுங்கள். உதாரணமாக நீங்கள் 4GB pendrive பயன்படுத்துகிறீர்கள் என வைத்துக்கொள்வோம் 1GB காலியாக இருக்க வேண்டும் எனில் 1024MB என இருக்குமாறு செட் செய்யவும் பாக்கி 3GB ஐ லினக்ஸ் எடுத்துகொள்ளும். நீங்கள் 0MB என செட் செய்தால் உங்கள் pendrive இடம் முழுவதும் லினக்ஸ் எடுத்துகொள்ளும்.
  9. இறுதியாக “Create”ஐ சொடுக்கவும். சற்று நேரம் காத்திருக்கவும். அவ்வளவு தான்!!!
  10. நீங்கள் லினக்ஸ் உபயோகிக்க வேண்டும் USB-3எனில் உங்கள் கணினி பூட் (Boot) ஆகுகையில் பூட் மெனுவில் சென்று முதல் நிலை பூட் சாதனத்தை(Primary Boot Device) Pendrive என மாற்றி கொண்டால், உங்கள் pendrive ல் இருந்து லினக்ஸ் பூட் ஆக தொடங்கும்.

இப்போது உங்கள் கணினியின் எந்த தரவிற்கும் பாதிப்பு இல்லாமல் கணினி இயங்கும். மேலும் விண்டோஸ் மூலம் நீங்கள் சேமித்த தரவுகளையும் நீங்கள் லினக்ஸ் மூலம் பயன்படுத்தலாம்.

எச்சரிக்கை: லினக்ஸ் இயங்கி கொண்டிருக்கும்போது எக்காரணம் கொண்டும் pendrive ஐ பிடுங்கிவிடாதீர்கள். பிறகு உங்கள் கணினி பாதிப்படைய வாய்ப்புள்ளது.

One thought on “Pendrive-ல் லினக்ஸ் நிறுவுவது எப்படி???

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s