ஆண்ராய்டு இயங்குதளம் நான் அனைவரும் அறிந்த ஒன்றே! கூகுள் ப்லே ஸ்டோரில் மட்டும் 10 கோடியே 30 லட்சதிற்கு மேல் மென்பொருள்கள் உள்ளன. அருமையான பல விளையாட்டுகளும் உள்ளன. அதில் சில விளையாட்டுகளை விளையாட சக்திவாய்ந்த கிராபிக்ஸ் வன்பொருட்கள் தேவை.
உங்கள் கணிணியிலும் ஆண்ராய்டு இயக்கலாம். இதனை செய்ய Bluestacks, Youwave போன்ற சில மென்பொருட்கள் இருந்தாலும், அவை மெதுவாகவும்,அதிக ராம் நினைவகத்தையும் எடுத்து கொள்கிறது. மேலும் இவை விண்டோஸ் கணிணிகளில் மட்டுமே செயல்படும். லினக்ஸ் போன்ற மற்ற இயங்குதளங்களில் இவை பயன்படாது.
இதனால் இங்கு “விர்சுவல் பாக்ஸ்” (Virtual Box) மூலம் ஆண்ராய்டு இயக்குவதை பற்றி இங்கு காணலாம். இதன் மூலம் உங்கள் விண்டோஸில் எவ்வளவு ராம் (RAM) மெமரி எடுக்க வேண்டும் , எவ்வளவு நினைவகம் எடுக்க வேண்டும் போன்றவற்றை நீங்கள் கையாளலாம்.
நீங்கள் லினக்ஸ் இயக்குதளம் உபயோகித்தாலும் இவ்வாறு செய்யலாம்.
1. விர்சுவல் பாக்ஸ்ஐ பதிவிறக்கம் செய்யுங்கள். நீங்கள் https://www.virtualbox.org/wiki/Downloads
2. ஆண்ராய்டு 4.4 கிட்கேட் தரவை பதிவிறக்கம் செய்யுங்கள். http://sourceforge.net/projects/android-x86/
3. உங்கள் கணினியில் விர்சுவல் பாக்ஸ்ஐ நிறுவுங்கள்(Install).
4. விர்சுவல் பாக்ஸ் சென்று “New” சொடுக்கவும்.
5. ஏதனும் ஒரு பெயர் கொடுக்கவும்.
6.Type: Linux; Version: Others
நீங்கள் லினக்ஸ் இயக்குதளம் உபயோகித்தாலும் இவ்வாறு செய்யலாம்.
ஹலோ அவினாஷ்! உங்கள் வலை தளத்தை பார்த்து என் ஒன்பது வயது பையன் குதி குதி என்று சந்தோஷத்தில் குதித்தான்.. அவன் விரும்புவதை எல்லாம் நீங்கள் பதிவாக பதித்து தள்ளி இருக்குறீர்கள்! இனி அடிக்கடி உங்கள் வலைப்பக்கம் வருவோம் என்று நினைக்கிறேன் 🙂
LikeLike
உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் 😀 ஊக்கத்திற்கு நன்றி ! 🙂 🙂
LikeLike