இந்திய மெஸ்சஞ்சர் நிறுவனமான Hike, Zip-phone எனும் அமெரிக்க அழைப்பு மென்பொருளை வாங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. Zip phone மென்பொருள் இணையம் வழி போன் அழைப்புகளை செய்யும்.
இது குறித்து Hike நிறுவன தலைவர் கவின் பாரதி மிட்டல் கூறுகையில்
முதல் நாளிலிருந்தே நாங்கள் இந்தியா தொடர்பை இணைய உலகிற்கு கொண்டுவருவோமென்று முழுமையாக நம்பினோம். Zip phone ஐ வாங்கியதன் மூலம் அந்த இலக்கை நோக்கி இன்னும் ஒரு அடி முன்னேறி இருக்கிறோம். இந்த தொழில்நுட்பம் இலவச குரல் அழைப்புகளை வேகமாக சந்தைபடுத்த எங்களுக்கு உதவியாக இருக்கும்.
என்றார்.
ஏற்கனவே Hike மெசெஞ்சர் இணையமற்ற குறுஞ்செய்தி(Hike Offline), ஸ்டிகர்(Sticker), பல வகையான கோப்புகளை பரிமாறும் வசதி(File Transfer) போன்ற பல தனித்துவமான வசதிகளை தருகிறது. மேலும் Zip phone-ஐ வாங்கியதன் மூலம் விரைவில் இலவச போன் அழைப்புகளையும் விரைவில் எதிபார்க்கலாம். பிரபல முன்னணி மெசெஞ்சரான Whatsappலும் இணையம் வழி போன் சேவை விரைவில் வர இருப்பது குறிப்பிடத்தக்கது.