திவிரவதிகளுக்கே மிரட்டல் விடும் ‘அனானிமஸ்’ ஹேக்கர்கள்

     ‘அனானிமஸ்‘ – ஒரு உலகளாவிய ஹேக்கர் குழு.     இணையம் மற்றும் பேச்சு சுதந்திரத்திற்கு எங்கு பங்கம் நேர்ந்தாலும், அதற்குஎதிராய் இணையத்தில் போர்க்கொடி தூக்குவார்கள் இவர்கள். தற்போது தீவிரவாதிகளுக்கு எதிராக போர்க்கொடி ஏந்தியுள்ளனர்.

    ‘சார்லி ஹெப்டோ(Charlie Hebdo)-ஒரு பிரெஞ்சு நையாண்டி வாரப்பத்திரிகை. 7/ஜனவரி /2015 அன்று பாரிஸ்-ல் உள்ள அதன் அலுவலகதில் எ.கே-47 துப்பாக்கி, ராக்கெட் லாஞ்சர் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த இரு நபர்கள் ‘அல்லாஹு அக்பர்‘ என கூறிக்கொண்டு சரமாரியாகக் சுட தொடங்கினர். இத்துப்பாக்கிச் சூட்டில் அப்பத்திரிகையின் எடிட்டர், கார்ட்டூன் ஓவியர்கள் என 12 பணியாளர்களும், பொதுமக்கள், காவலாளிகள் என மொத்தம் 17 பேர் இறந்தனர். மொத்தம் 21 பேர் பலத்த காயமடைதுள்ளனர்.  இதற்கு காரணம் அப்பத்திரிக்கையில் இஸ்லாம் மதத்தை கிண்டல் செய்யும் வகையில் வெளிவந்த ஒரு கேலிச்சித்திரமே(Cartoon)!

சார்லி ஹெப்டோ அட்டைப்படம்

இஸ்லாம் மதத்தை கேலி செய்யும் வகையில் நவம்பர் 2011ல் வெளியான ‘சார்லி ஹெப்டோ’ பத்திரிகையின் அட்டைப்படம்.

     இச்சம்பவம் 1961ற்கு பிறகு பாரிஸ்ல் நடந்த கொடூரமான படுகொலை சம்பவம். இது குறித்து பல உலக நாடுகளும் பத்திரிகைகளும் கண்டனம் தெரிவித்துள்ளபோது, பிரபல ஹேக்கர் குழுவான ‘அனானிமஸ்’ அத்திவிரவாத கும்பலுக்கு அதிரடி மிரட்டல் விடுத்துள்ளது.

உலகில் உள்ள  அனானிமஸ் அனைவரும் உங்களை எதிர்த்து போரிட முடிவு செய்திருக்கிறோம், தீவிரவாதிகளே!

   

     சார்லி ஹெப்டோவை தாக்கியவர்களை மிரட்டி அனானிமஸ் குழு ‘யூடுப்’ ல் காணொளியொன்றை வலையேற்றியுள்ளது.ஸ்பானிஷ் மொழியில் உள்ள அக்காணொளியில் கூறியிருப்பது:

 “உங்கள் ஒவ்வொருவரையும் கண்டுபிடித்து அழிப்போம். நீங்கள் அப்பாவி மக்களை கொன்றிருக்கின்றீர்கள். உங்கள் முட்டாள்தனம் எங்கள் அச்சு சுதந்திரத்தை அழிக்கவிடமாட்டோம்.”

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s