மைக்ரோசாப்ட் தனது அடுத்த “விண்டோஸ்” இயங்குதள உருவாக்கத்தில் மிகத்தீவிரமாக ஈடுபட்டுள்ளது. விண்டோஸ்-7, விண்டோஸ் 8/8.1-ஐ தொடர்ந்து, அடுத்த விண்டோஸ் பதிப்பின் பெயர் “விண்டோஸ் 10”.( ஏன் விண்டோஸ் 9 இல்லை என தெரியவில்லை ) .இந்த வருட இறுதியில் வெளியாக இருக்கும் விண்டோஸ் 10ன் முன்னோட்டம் ஏற்கனவே வெளியிடப்பட்டுவிட்டது. இதில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள நச்சுனு 5 அம்சங்களை பாப்போம் இப்போது…
மீண்டும் Start:

விண்டோஸ் 10ல் ஸ்டார்ட் மெனு
இதில் என்ன சிறப்பு.? 1995-ல் விண்டோஸ் 95 அறிமுகபடுத்தபட்ட “Start” பட்டன், விண்டோஸ் 8 ல் நீக்கப்பட்டது. இது பெரும் விமர்சனத்திற்குள்ளானது. மீண்டும் இப்போது விண்டோஸ் 10ல் மேம்படுத்தப்பட்டு அறிமுகமாகியுள்ளது Start பட்டன். புதிய ஸ்டார்ட் பட்டன் விண்டோஸ் 7 ல் உள்ளது போல் அமைக்கப்பட்டுள்ளது. இதன் அளவை மாற்ற முடியும், லைவ் டைல்ஸ் (Live tiles), பிங் தேடல்(Bing) போன்ற நவீன வசதிகளும் இதில் கிடைக்கும்.
உங்கள் உதவியாளர்-CORTANA:

விண்டோஸ் 10ல் கோர்டானா
உங்கள் கையில் இருக்கும் ஸ்மார்ட்போன்கள் நீங்கள் சொல்வதைஎல்லாம் கேட்கும். அப்படியிருக்க, உங்கள் கணினி கேட்க வேண்டாமா? அதற்காக தான் “கோர்டானா(Cortana) “ நீங்கள் சொல்லுவதையெல்லாம் கட்டளைகளாக ஏற்று செய்யக்கூடியது. இது முதலில் விண்டோஸ் போனில் அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது நம் கணினிகளுக்கும் கிடைக்கிறது.
பல டெஸ்க்டாப்கள்:
ஒரே நேரத்தில் கணினியில் பல மென்பொருட்களை இயக்கி பல வேலைகளை செய்பவர்களின் திரைபலகம் (Desktop) மிகவும் சிக்கலாக இருக்கும். இந்தச் சிக்கலை தீர்க்க விண்டோஸ் 10 ல் நீங்கள் பல டெஸ்க்டாப்களைத் திறந்து பல வேலைகளை எளிதில் செய்யமுடியும்.

இப்படத்தில் கீழே காணுங்கள். மொத்தம் ஐந்து டெஸ்க்டாப்கள், ஒவ்வொன்றிலும் பல விண்டோக்கள் திறந்து இருக்கும்
உதாரணமாக, நீங்கள் ஒரே நேரத்தில் இணையத்தில் பதிவிறக்கம் செய்துகொண்டு இருக்கிறீர்கள், ஒரு பெரிய கோப்பினை இடமாற்றம் செய்து கொண்டிருகிறீர்கள், அதே சமயத்தில் ஏதோ ஒரு பழைய கோப்பினை தேடிக்கொண்டிருக்கிறீர்கள் என்றால் உங்கள் திரையில் பற்பல விண்டோக்கள் உங்களை குழப்பி வேலையைத் தாமதப்படுத்தும்.இதுபோல பளுவான வேலைகளை செய்வோர் பல திரைகளை(Moniter) உபயோகிப்பார்கள். ஆனால் விண்டோஸ் 10-ல் அதே திரையில் ஒரு புதிய டெஸ்க்டாப் ஐ உருவாக்கி, ஒவ்வொரு டெஸ்க்டாபிலும் ஒவ்வொரு வேலைக்காக நீங்கள் பிரித்து உபயோகப்படுத்தலாம். ஒரு டெஸ்க்டாபில் இருந்து இன்னொரு டெஸ்க்டாபிற்கு மாறினாலும் மற்ற டெஸ்க்டாபில் உள்ள எல்லா மென்பொருட்களும் இயங்கிக்கொண்டுதான்இருக்கும். இதனால் உங்கள் வேலைகள் தடைப்படாது.
முன்னதாக ஆப்பிள்-ன் மேக் ஒ.எஸ், லினக்ஸ் இயங்குதளத்தில் மட்டும் கிடைத்த இந்த வசதி இப்போது விண்டோஸ்க்கும் வந்துள்ளது.
ஒரே ஒரு விண்டோஸ் பல்வகை சாதனங்கள்:
ஒரே விண்டோஸ் 10 இயங்குதளம் ஸ்மார்ட்போன், டேப்லெட்,கணினிகள்,Xbox, டிவி என சகல மின்னணு சாதனங்களுக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இனி கணினிகளுக்கு ஒரு இயங்குதளம், போன்களுக்கு வேறு இயங்குதளம் என வேற்றுமைகள் இருக்காது.
மேலும் கணினிகளுக்கான விண்டோஸ் ஸ்டோரும், போன்களுக்கான ஸ்டோரும் ஒன்றாக்கப்பட்டுள்ளது இதில் மிக அருமையான சிறப்பம்சம் என்னவென்றால், விண்டோஸ் 10க்கு நீங்கள் ஒரு மென்பொருள் எழுதினால், அது சிறிய போன் முதல் டிவி வரை அனைத்திலும் இயங்கும். இந்த யுக்திக்கு “Universal apps” என மைக்ரோசாப்ட் பெயரிட்டுள்ளது. இதன் மூலம் ஆப்பிள் ஸ்டோர், கூகுள் ப்ளே ஸ்டோர் ஐ காட்டிலும் விண்டோஸ் ஸ்டோர் அதிக மென்பொருகளை பெரும்.
இலவசம்:
ஆமாம்! மைக்ரோசாப்டின் வரலாற்றில் முதன் முதலாக இலவச “விண்டோஸ்” . விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8/8.1 பயன்படுத்துபவர்கள் விண்டோஸ் 10ஐ வெளியாகி முதல் வருடத்தில் இலவசமாக மேம்படுத்திக்கொள்ளலாம்.
மேலும் மைக்ரோசாப்ட்
“விண்டோஸ்ஐ நாங்கள் “சேவையாக” பார்க்கிறோம் (Software as a service) “ என கூறியுள்ளது.
சென்ற முறை மைக்ரோசாப்ட், ஆபீஸ் மென்பொருளை ‘சேவையாக’ பார்த்தபோது “ஆபீஸ் 365” என்ற புதிய தொகுப்பு வெளியானது. இதை உபயோகிக்க நீங்கள் வருடா வருடம் மைக்ரோசாப்டிற்கு சந்தா செலுத்த வேண்டும். இப்படி பல பொறிகளை விண்டோஸ் 10ல் மைக்ரோசாப்ட் வைத்துள்ளது. இன்னும் இத்தொகுப்பின் விலை அறிவிக்கப்படவில்லை. பாப்போம் பொறுத்திருந்து…
விண்டோஸ் 10 தொழில்நுட்ப முன்னோட்டம் (Technical preview) இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ள விரும்புகிறவர்கள் இங்கே சொடுக்கவும். இத்தொழில்நுட்ப முன்னோட்டம் இன்னும் முழுமையடையாத மென்பொருள். பல பிழைகள் இருக்கலாம். அவை உங்கள் கணினியை பாதிக்கலாம்.எனவே கவனமுடன் செயல்படவும்.
என்னை விட என் பையன் Windows 10 உபயோகம் செய்து பார்க்க மிக ஆவலாக இருக்கிறான்! நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டேன்! நன்றி 🙂
LikeLiked by 1 person