வீடியோ சாட் மிக சாதாரணம் ஆகிவிட்டது. பல நிறுவனங்கள், சமுக வலை தளங்கள் இலவச வீடியோ சட வசதியை மக்களுக்கு தருகிறது என்றாலும் ‘Firefox hello” சற்று வித்தியாசம் ஆனது. இதை வித்யாசாப்படுத்துவது இதன் எளிமை.

பயர்பாக்ஸ் ஹலோ
வழக்கமாக நீங்கள் இணையத்தில் வீடியோ சாட் செய்யவேண்டுமானால் நீங்கள் Skype, Google, Viber, போன்ற நிறுவனத்தில் உறுப்பினர் ஆகி கணக்கு வைத்திருக்க வேண்டும். நீங்கள் பேச வேண்டிய நபரும் அந்த நிறுவனத்தில் கணக்கு வைத்திருக்க வேண்டும். மேலும் இருவரின் கணிணியிலோ, உலவியிலோ அந்நிறுவனத்தின் மென்பொருள் பதிந்திருக்க வேண்டும்.
இது எதுவுமே இல்லாமல் ஒரே சொடுக்கில் வீடியோ அழைப்பு தருவது தான் “பயர்பாக்ஸ் ஹலோ”. மென்பொருட்கள் தேவையில்லை, எதிலும் கணக்கு வைத்திருக்க தேவையில்லை, உங்கள் தனிநபர் விவரங்கள் எதுவுமே தேவையில்லை, அவ்வளவு ஏன்? இவ்வசதியை உபயோகிக்க பயர்பாக்ஸ் உலவி கூட தேவையில்லை. வெறும் இணைய இணைப்பும், வலை நிகழ்நேர தொடர்பு(WebRTC) வசதியும் கொண்ட Opera, Google chrome,Firefox 36 உலவிகள் இருந்தால் போதும்.
-
பயர்பாக்ஸ் உலவியை திறந்து வலது மேல் மூலையில் உள்ள பயர்பாக்ஸ் ஹலோ பட்டன்ஐ சொடுக்கவும்.
-
உங்களுக்கென ஒரு பிரத்யேக லிங்க் உருவாகும்.
-
அதை மற்றவுடன் பகிர்ந்தால் போதும். மற்றவர் லிங்கை சொடுக்கியவுடன் இருவரும் இணைவீர்கள்.
இதன் சிறப்பம்சமே எந்த விவரங்களும் இல்லாமல், மென்பொருட்களும் இல்லாத எளிமையே.வலை நிகழ்நேர தொடர்பு(WebRTC) வசதியில்லாத உலவிகளில் இவ்வசதியை பெற முடியாது. தற்போது உள்ள பிரபல உலவிகளில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், ஆப்பிள் சபாரி போன்ற உலவிகள் WebRTC வசதி இல்லாததால் இவ்வசதியை பெறமுடியாது.