விண்டோஸ் எக்ஸ்பியில் இயங்கும் மென்பொருட்களை விண்டோஸ் 7/8 இயக்குவது எப்படி?

        பெரு நிருவனகளும் மக்களும் புதிய இயங்குதளத்திற்கு மாறாமல்யோசிப்பதற்கு  ஒரு  காரணம்  அவர்களின் மென்பொருட்கள். புதிய இயக்கதளத்திற்கு மாறியபின்  மென்பொருள் இயங்காவிடில் பெரும் சிக்கலாகி விடும். பெரும்பாலும் விண்டோஸ் எக்ஸ்பியில்(Windows XP) இயங்கும் மென்பொருள் மற்ற விண்டோஸிலும் இயங்கும். சில மென்பொருட்கள் நவீன விண்டோஸில் இயங்காது. அப்படி இயங்காத மென்பொருகளை இயங்கவைக்கும்  வழிமுறைகளை இங்கு காண்போம்.

      புதிதாக வரும் அணைத்து விண்டோஸ் இயக்கதளமும் பழைய மென்பொருகளையும்  இயக்குமாறு வடிவமைக்கபடும். இதனை  ‘பின்னோக்கிய இணக்கத்தன்மை’ (Backward compatability) என அழைப்பர்.

  விண்டோஸ் எக்ஸ்பியில் நன்றாக இயங்கிய மென்பொருள் விண்டோஸ் 7/8ல் இயங்கவில்லை என்றால், அந்த மென்பொருளுக்கு மட்டும் விண்டோஸ் எக்ஸ்பியை போன்ற ஒரு ‘மெய்நிகர் சுழலை(Virutal environment)’  உருவாக்கி  அதனை இயங்கவைக்கும். இதை நீங்கள் செய்ய

 1. உங்கள் கணிணியில் Control panel சென்று Troubleshooting ஐ சொடுக்கவும்.
  control panel

 2. பின்னர் ‘Run programs for previous versions of windows’ ஐ சொடுக்கவும்.

  run programs

 3. திறக்கும் விண்டோவில் ‘Next’ ஐ சொடுக்கவும்.
  wizard 1

 4. சரியாக இயங்காத மென்பொருளை தேர்வு செய்யவும்.
  select program

 5. அடுத்து ‘Troubleshoot programs’ஐ சொடுக்கவும்.
  try recoomande

 6. உங்கள் மென்பொருள் இயங்கவில்லை என்றால் முதல் கட்டத்தில் கிளிக் செய்யவும். உங்கள் மென்பொருள் இயங்கி, திரையில் ஒழுங்காக தெரியவில்லையெனில் இரண்டாவது கட்டத்தில் சொடுக்கவும். உங்கள் மென்பொருள் இயங்குவதற்கு முன் ஏதேனும் எச்சரிக்கை அல்லது Error காட்டுகிறது என்றால் மூன்றாவது கட்டத்தில் கிளிக் செய்யவும்.

  compatible settings

 7. எந்த இயக்கத்தளத்தில் சரியாக இயங்கியது என்பதை கிளிக் செய்து “Next” ஐ சொடுக்கவும்.

  Capture

 8. பிறகு “Test program” என்பதை சொடுக்கினால், பிரச்சனைக்குரிய உங்கள் மென்பொருள் இயங்கும்.
  test the program
 9. சரியாக வேலைசெய்ததெனில் மீண்டும் பழைய “Troubleshooter” சென்று “Next” ஐ சொடுக்கவும்.
 10. yes save these settings for this program” என்பதை சொடுக்கவும்.
  final
 11. அப்படியும் இயங்கவில்லை எனில் “No, Try again using different settings” என்பதை கிளிக் செய்து வேறு இயங்குதளத்தை கிளிக் செய்து சோதித்து பார்க்கவும்.

இந்த முறை உங்களுக்கு பயனளிக்கவில்லையெனில்  மைக்ரோசாப்ட் தரும் “Windows XP mode” என்னும் சிறப்பு மென்பொருளை பதிவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிறுவி பயன்படுத்தவும். இது கண்டிப்பாக பயனளிக்கும்.

One thought on “விண்டோஸ் எக்ஸ்பியில் இயங்கும் மென்பொருட்களை விண்டோஸ் 7/8 இயக்குவது எப்படி?

 1. நல்ல உபயோகமான தகவல்! இப்படி இல்லைனா அப்படி , அப்படியும் வரலையா இப்படி , என்று பல வழிகளை ஒரே நேரத்தில் சுட்டி காட்டி இருக்குறீர்கள்!அதனால் எவ்வித குழப்பமும் இன்றி , இதனை படிப்பவர் தன் பிரச்னையை தீர்த்து கொள்வார்!

  Liked by 1 person

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s