விண்டோஸ் 10 இலவசமாக பெறுவது எப்படி?

விண்டோஸ் 10

விண்டோஸ் 10

விண்டோஸ் 8 வெளியான சில மாதங்களில் இருந்தே மைக்ரோசாப்ட் தனது அடுத்த இயங்குதளத்தை உருவாக்க ஆயுத்தமாகிவிட்டது. என்னதான் விண்டோஸ் 7ஐ காட்டிலும் அதிக வசதிகளை விண்டோஸ் 8 பெற்றிருந்தாலும் மைக்ரோசாப்ட் எதிர்பார்த்த வெற்றியை விண்டோஸ் 8 பெற முடியவில்லை – காரணம் விண்டோஸ் 8ன் புதிய பயனர்  இடைமுகம்(User interface) . ஒரு வழியாக இரண்டு வருடத்திற்கு பிறகு ஜூலை 29 தேதி விண்டோஸ் 10 பொது மக்களுக்கு வெளியிடப்பட்டது.

முதல் முறையாக விண்டோஸ் 10 இலவசமாக பதிவிறக்கம்(ஜூலை 2016-க்குள் ) செய்து கொள்ளலாம். ஆனால் சில நிபந்தனைகள் :

 1. விண்டோஸ் 10ஐ இலவசமாக பெற, உங்கள் கணிணி விண்டோஸ் 7, விண்டோஸ் 8 அல்லது விண்டோஸ் 8.1 இயங்குதளங்களை (OS) பயன்படுத்த வேண்டும். விண்டோஸ் XP, VISTA பயன்படுத்துபவர்களுக்கு  இலவசம் கிடையாது .
 2. உங்கள் கணினியில் பயன்படுத்தப்படும் விண்டோஸ் உண்மையான (GENUINE WINDOWS) உரிமம் பெற்ற விண்டோஸ் ஆக இருக்க வேண்டும்.உங்கள் கணினியின் உரிமத்தை பார்க்க ‘My Computer’ ல்  ரைட் கிளிக் செய்து ‘PROPERTIES’ ஐ  கிளிக் செய்யவும். பின்னர் கிடைக்கும் விண்டோவில் கீழே ‘Windows is activated‘ என்று இருக்கிறதா! அப்படியானால்  மகிழ்ச்சி!! நீங்கள் உரிமம் பெற்ற விண்டோஸ் வைத்திருகிறீர்கள் .

  உரிமம் பெற்ற விண்டோஸ்

  உரிமம் பெற்ற விண்டோஸ்

 3. இந்த இலவசம் விண்டோஸ் எண்டர்பரைஸ்  எடிஷன் (Windows Enterprise),விண்டோஸ் சர்வர் (Windows server), விண்டோஸ் ஆர்.டி (Windows RT)  போன்றவைக்கு பொருந்தாது. மேலும்  கார்பரேட் உரிமம்(Corporate License) பெற்ற அலுவலக, கல்வி நிலைய கணினிகளுக்கும் இலவசம் கிடையாது.

மேலே சொன்ன நிபந்தனைகள் உங்களுக்கு பொருந்துகிறதா? அப்படியானால் உங்களுக்கு விண்டோஸ் 10 இலவசமாக கிடைக்கும்  🙂

 1. உங்கள் கணிணியில் “Automatic update” ஐ On செய்து  புதிதாய் வந்துள்ள அனைத்து  அப்டேட்களை  பதிவிறக்கம் செய்து நிருவிகொள்ளுங்கள். கணினியை  மறுதொடக்கம்(Restart) செய்யுங்கள்
 2. சிறிது நேரத்தில் உங்கள் கணினியின் Taskbar ன் வலது மூலையில் சிறிய விண்டோஸ் படம் தென்படும்.அதை கிளிக் செய்யுங்கள் . ;வரவில்லையெனில் சில நாட்கள் பொறுத்திருங்கள். உங்களுக்கு கிடைக்கும். .. wind10 full wind10

  Taskbar ல் வரும் விண்டோஸ் 10 அப்டேட்

  Taskbar ல் வரும் விண்டோஸ் 10 அப்டேட்

 3. பிறகு கிடைக்கும் விண்டோவில் ‘Reserve your Free upgrade‘ என்பதை கிளிக் செய்யவும். அவ்வளவு தான்!

இனி அனைத்தையும் உங்கள் கணினி பார்த்துக்கொள்ளும். தானாகவே விண்டோஸ் 10 பதிவிறக்கம் செய்யப்பட்டு  நிறுவப்படும் . இதற்கு சில நாட்கள் ஆகலாம். அதுவரை உங்கள் கணினியை நீங்கள்  எப்போதும் போல பயன்படுத்தலாம் .

2 thoughts on “விண்டோஸ் 10 இலவசமாக பெறுவது எப்படி?

 1. பிங்குபாக்: விண்டோஸ் 10 இலவசம் முடிகிறது இன்னும் சில தினங்களில்… | அறிவியல் தமிழன் - Ariviyal tamilan

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s