மைக்ரோசாப்ட் -ன் விண்டோஸ் 10 இயங்குதளம் கடந்த ஆண்டு வெளியானது. விண்டோஸ் 7/8/8.1 பயன்படுத்துபவர்கள் ஓராண்டிற்குள் இலவசமாக விண்டோஸ் 10 மாறிக்கொள்ளாம் என இந்நிறுவனம் அறிவித்திருந்தது. இக்காலக்கெடு வரும் ஜூலை 29 ஆம் தேதியுடன் முடிகிறது.
உலகில் 1பில்லியன் (1பில்லியன்) மைக்ரோசாப்ட் விண்டோஸ் இயங்குதளம் அமைந்த கணினிகள் இருக்க வேண்டும் என்ற இலட்சியத்துடன் விண்டோஸ் 10 ஐ வெளியிட்டது. இந்த நோக்கத்திற்காகவே ஓராண்டிற்கு இலவசமாக விண்டோஸ் 10 க்கு மேம்படுத்திக்கொள்ளும் சலுகையும் அளித்தது. ஆனால் அந்த இலக்கை மைக்ரோசாப்ட் இன்னும் எட்டவில்லை.
மைக்ரோசாப்ட் இந்த காலவகாசத்தை நீடிக்குமா இல்லையா என்பது மைக்ரோசாப்டை பொறுத்தது. இலவசமாக விண்டோஸ்10 க்கு மாற இந்த பதிவை பார்க்கவும்.