ஸ்விப்ட்கி(Swiftkey) நிறுவனத்தை வாங்கியது மைக்ரோசாப்ட்
ஆண்டிராய்டு மற்றும் ஐஒஸ் கைபேசிகளில் அதிகம் பயன்படுத்தப்படும் விசைபலகை மென்பொருள் ‘ஸ்விப்ட்கி’. சொற்பிழை திருத்தம், வார்த்தைகளை முன்னறிவிக்கும் திறன் ஆகிய அதிநவீன வசதிகளை கொண்டுள்ள இவ்விசைபலகை ஆண்டிராய்டு-ல் கொடிகட்டி பறக்கிறது. இன்று வரையில் ஆண்டிராய்டு-ல் முன்னணியில் திகழும் இம்மென்பொருள் நிறுவனத்தை மைக்ரோசாப்ட் வாங்கியுள்ளது.