CES என்பது Consumer Electronics Show என்பதின் சுருக்கம். இதன் அர்த்தம் ‘நுகர்வோர் மின்னணு கண்காட்சி‘ ஆகும். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் லாஸ் வேகஸ்-ல் நடைபெறும். உலகின் பெரும் நிறுவனங்கள் அனைத்தும் தங்களின் புதிய மின்னணு கண்டுபிடிப்புகளையும், பொருட்களையும் இங்கே அறிமுகம் செய்யும். பழைய Video cassette Recorder (VCR) முதல் நவீன 3D TV வரை அனைத்தும் முதல் முதலாக CES-ல் தான் அறிமுகபடுத்தப்பட்டது. CES முதன்முதலில் 1976 ல் நியூ யார்க் நகரில் நடத்தப்பட்டது. 2015 ஆம் ஆண்டிற்கான CES -2015 ஜனவரி 6 முதல் 9 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.